சுடச்சுட

  

  தேனி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 15 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியருக்கான கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

  பெரியகுளம் பி.எஸ்.டி. நினைவு விளையாட்டு அரங்கில் 1 வார காலத்துக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் முகாம் நடைபெறுகிறது. மாவட்ட கூடைப் பந்து கழக துணைத் தலைவர் எஸ்.தாவுத் பாட்சா தலைமை வகித்து, முகாமை தொடக்கி வைத்தார். இணைச் செயலர் எம்.உமாகாந்தன் முன்னிலை வகித்தார்.

  பயிற்சியாளர்கள் வாசுதேவன், மாரிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் முகாம் நிறைவில் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai