Enable Javscript for better performance
தலித் கிறிஸ்தவ அமைப்புகள் கவன ஈர்ப்பு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தலித் கிறிஸ்தவ அமைப்புகள் கவன ஈர்ப்பு கூட்டம்

    By உத்தமபாளையம்  |   Published on : 27th April 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்ட தலித் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் உத்தமபாளையத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    உத்தமபாளையம் புறவழிச் சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தேனி மறைவட்ட அதிபர் விமிசார்லி மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலர் செபாஸ்டின் ஆகியோர் தலைமை வகித்தனர். உத்தமபாளையம் பங்குத் தந்தை பால்ராஜ், தலித் பணிக் குழு செயலர் ஆல்பர்ட் நெல்சன், சி.எஸ்.ஐ. குருசேகர தலைவர் சாமுவேல் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பிரிந்துரையை அமல்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது சம்பந்தமாக கடந்த 11 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க வேண்டும். 1956, 1990 ஆண்டுகளில் மதம் மாறிய சீக்கியர்கள், நிறங்காரியர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கியது போல் மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் அத்தகைய அந்தஸ்தை வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக ஆனந்தராஜ் வரவேற்றார். எலியால் ராஜா, கஸ்பார்ராஜ், பெர்னாண்டஸ் மற்றும் மதுரை மண்டல சி.எஸ்.ஐ. திருமண்டல பதிவாளர் ரத்திரனராஜா ஆகியோர் பேசினர். தீர்மானத்தை சவரிமுத்து வாசித்தார். நெல்சன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai