சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த பைக் விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவரது மனைவி பச்சையம்மாள் (35). இருவரும் அய்யனார் கோயிலுக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, வைகை நகர் அருகே பைக்கின் பக்கவாட்டில் சென்ற லாரியில் நிலை தடுமாறி இருவரும் விழுந்து விட்டார்களாம்.

    இதில் பச்சையம்மாள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காயமடைந்த காளிமுத்து கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai