சுடச்சுட

    

    தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மே 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், குடிநீர் விநியோகம், ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்த விழிப்புணர்வு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, சீமை கருவேல மரங்களை அகற்றுதல், அரசு திட்ட பயனாளிகள் பட்டியல், தாய் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், சூரிய சக்தி விளக்குகளை பராமரித்தல், ஊராட்சி பொது செலவினம் ஆகிய பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai