Enable Javscript for better performance
வங்கி மேலாளர் மீது மோசடி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம் ஏரசக்கநாயக்கனூரில் அரசுடமை வங்கியின் கிளை மேலாளர் மீது சின்னமனூர் போலீஸார் பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சின்னமனூர் முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. ஏரசக்கநாயக்கனூரில் செயல்படும் அரசுடமை வங்கி கிளையில் இவரது கணக்கில் ரூ.2,45,032 இருந்ததாம். இதையடுத்து பணத்தை எடுக்க பாண்டித்துரை சென்ற போது கணக்கில் பணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாம்.

    இது குறித்து கிளை மேலாளரிடம் அவர் கேட்ட போது, இதே வங்கியுடன் தொடர்புடைய வேறு கிளைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தாராம்.

    அதனைத் தொடர்ந்து பாண்டித்துரை தனது வங்கி பணத்தை அனுமதியின்றி வேறு கிளைக்கு மாற்றம் செய்து பண மோசடி செய்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, சின்னமனூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன்படி சின்னமனூர் போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai