சுடச்சுட

  

  சின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் கோயில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

          தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கன்னியம்பட்டியைச் சேர்ந்த ரா.சுப்பையா தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:

    சின்னமனூர் ஒன்றியம், கன்னியம்பட்டியில் கிராம மக்களுக்கு பொதுவாக கருப்பசாமி கோயில் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 2 ஏக்கர் 62 சென்ட் பரப்பளவு உள்ள நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

         இதே கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலுக்குச் சொந்தமான நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளது.

   கோயில் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai