சுடச்சுட

    

    தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தேமுதிக தலைமை நிலைய பேச்சாளர் மீது தமிழக முதல்வர், மின்துறை அமைச்சர் சார்பில் திங்கள்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

           போடியில் கடந்த 2014, டிச. 26-ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தலைமை நிலையப் பேச்சாளர் வளர்பிறைசோழன் என்பவர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

             இந்த நிலையில், தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோர் சார்பில், வளர்பிறைசோழன் மீது அரசு வழக்குரைஞர் டி.கே.ஆர்.கணேசன்  2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவஞானம், வளர்பிறை சோழனை வரும் ஜூன் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai