சுடச்சுட

  

  பெரியகுளம் வடகரை கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட ஜெயராஜ்-செல்லத்துரை அறக்கட்டளை சார்பில் இடம் தானமாக வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

   மாவட்ட நூலக அலுவலர் ரவீந்திரநாத் 1308 சதுர அடி இடத்துக்கான பத்திரத்தை பெற்றுக் கொண்டார். அறக்கட்டளை நிர்வாகத் தலைவர் ஜெ.சி.ஜெயபால் பத்திரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்நலச் சங்க செயலர் எம்.அன்புக்கரசன், வடகரை நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.ஏ.இளங்கோவன், நூலகர்கள் சவடமுத்து (தென்கரை), காளீஸ்வரி (வடகரை) மற்றும் நகர பிரமுகர்கள் குப்புசாமி, ஷாஜஹான், மோகன், கவிஞர் கருப்பையா, கூட்டுறவு சங்க இயக்குநர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai