Enable Javscript for better performance
மே 16-இல் கொடைக்கானல் மலர் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கோடை விழாவை முன்னிட்டு, மே 16ஆம் தேதி கொடைக்காலில் மலர் கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     கொடைக்கானலில் கோடைவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார். கொடைக்கானல் வன அலுவலர் வெங்கடேசன், நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தது:

     கொடைக்கானலில் மே 16ஆம் தேதி மலர் கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைந்த விலையில் உணவு வகைகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல் - பழனி சாலை மற்றும் கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலைகளையும் சீரமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     கோடை விழாவையொட்டி கால்பந்து, கைப்பந்து, மீன்பிடிக்கும் போட்டி, மாரத்தான், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்திடவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

        கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு.நாகேந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன், கொடைக்கானல் கோட்டாட்சியர் என்.சுரேஷ், உதவி இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) பாண்டியன், சுற்றுலா அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai