சுடச்சுட

    

    ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாத யாத்திரை சென்ற 40 பேர் கைது

    By தேனி  |   Published on : 28th April 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே வீரபாண்டியில் திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற, திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதைத் திட்ட போராட்டக் குழுவினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

      போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வீரபாண்டியில் இருந்து பாத யாத்திரையாகச் சென்று தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

        இதன்படி, வீரபாண்டியில் இருந்து அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழு அமைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில், கோரிக்கையை வலியுறுத்தி பாத யாத்திரையை தொடங்கிய 40 பேரை, தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai