சுடச்சுட

  

  ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றத்தை கவுன்சிலர்கள் முற்றுகை

  By ஆண்டிபட்டி  |   Published on : 29th April 2015 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஒரு சாக்கு ரூ.80-க்கு கொள்முதல் செய்ததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்றத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

  ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில், காலி சாக்குகள் கொள்முதல் மற்றும் கொசுமருத்து, பினாயில் உள்ளிட்டவை குறித்த தீர்மானம், மன்றத்தின் முன் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த விவாதம் நடைபெறும்போது, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி கூட்டத்தை முடித்தனர்.

  இதனால் ஆத்திரமடைந்த துணைத் தலைவர் உள்ளிட்ட 11 கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்றத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் காலி சாக்கு, கொசு மருந்து கொள்முதல் குறித்து புகார் செய்தனர்.

  இது குறித்து, பேரூராட்சி துணைத் தலைவர் கண்ணன் கூறுகையில், உர மூட்டை பிளாஸ்டிக் சாக்குப் பை ஒன்று ரூ.80-க்கு கொள்முதல் செய்துள்ளனர். மேலும், கொசு மருத்து ரூ. 5 லட்சம், பிளீச்சிங் பவுடர் ரூ. 3 லட்சம், பினாயில் ரூ. 1.45 லட்சத்துக்கும் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். இது குறித்து விவரம் கேட்டால், பதில் சொல்லாமல் கூட்டத்தை முடித்து விட்டதாகக் கூறுகின்றனர் என்றார்.

  பேரூராட்சி செயல் அலுவலர் மாரியப்பன் கூறுகையில், பிளாஸ்டிக் சாக்குப் பை கொள்முதல் ரூ. 80 என்பது பிரிண்டிங் தவறு நடந்துவிட்டது. மேலும், கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர், பினாயில் ஆகிய கொள்முதல் முறையாக நடந்துள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai