சுடச்சுட

  

  ஆய்வக நுட்புநர், ஓட்டுநர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயம்

  By தேனி  |   Published on : 29th April 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 676 மூன்றாம் நிலை ஆய்வக தொழில்நுட்புநர், 580 ஒட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூன்றாம் நிலை ஆய்வக தொழில்நுட்புநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 2015 ஜூலை 1 ஆம் தேதி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கும், பிற்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்பட்டோர் 32 வயதுக்கும், முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்கும் உள்பட்டு இருக்கவேண்டும்.

    ஆய்வகத் தொழில்நுட்புநர் பணியிடத்துக்கு பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்ட ஓராண்டு மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநர் சான்று பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2015 ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

    ஓட்டுநர் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2005 செப்டம்பர் 6 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட வகுப்பினர், 2007 ஜூன் 1 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், 2005 செப்டம்பர் 7 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள மிகவும் பிற்பட்ட மற்றும் பிற்பட்டோர், 2005 செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள இதர வகுப்பினர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

     தகுதியுள்ள பதிவு மூப்புதாரர்கள், வரும் மே 2ஆம் தேதி உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தங்களது பெயர் பதிவு மூப்பு பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரத்தை உறுதி செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai