சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட சர்வக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடத்தப்பட்டது.

      தாமரைக்குளம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் ரூ. 50 லிருந்து ரூ. 100 ஆகவும், இதற்கான வைப்புத் தொகை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதைக் கண்டித்து, வ.உ.சி. சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இப் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் வி. அன்பழகன் (திமுக) தலைமை வகித்தார். பி. கருத்தராசு (திமுக), ஜி. கிருஷ்ணன் (காங்கிரஸ்), ராஜேந்திரன் (மதிமுக), ரவிச்சந்திரன் (பாஜக), திருப்பதி (தேமுதிக), ஆண்டி (விடுதலைச் சிறுத்தைகள்), மகாலிங்கம் (மார்க்சிஸ்ட்) உள்பட அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai