சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே பசு ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. 

        ஆண்டிபட்டி  லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் விவசாயி காந்திராஜன். இவர் ஜெர்ஸி இன பசுவை வளர்த்து வந்தார். பசுவுக்கு சினை ஏற்பட்டிருந்தது. திங்கள்கிழமை பசுவுக்கு கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து கோம்பைத் தொழு கால்நடை அரசு மருத்துவர் வேயிலானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதனையடுத்து  சம்பவ இடத்துக்குச் சென்ற மருத்துவர் பசுக்கு சிகிச்சையளித்தார். இதில் பசு இரண்டு பெண் கன்றுகளை ஈன்றது. இதையடுத்து இப்பகுதி மக்கள் மாடு, கன்றுகளை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai