சுடச்சுட

  

  போடி அருகே மரவள்ளிக் கிழங்கு விளைச்சல் அதிகரித்தும், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  தேனி மாவட்டம், போடியை அடுத்த தேவாரம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இக் கிழங்கு, தேவாரம், தம்மிநாயக்கன்பட்டி, தே.ரெங்கநாதபுரம், தே.மீனாட்சிபுரம், ராமகிருஷ்ணாபுரம், பொட்டிப்புரம், மறவபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது.

  அருகிலுள்ள கேரள மாநில மக்களின் முக்கிய உணவாக உள்ளதால், அங்கும் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. மேலும், ஜவ்வரிசி தயாரிப்புக்கும் இக் கிழங்கு பயன்படுவதால், தேவாரம் பகுதியில் பயிர் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கு, கேரளம், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த ஆண்டு பருவ மழையினாலும், 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டதாலும், இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது.

  இது, அதிக பராமரிப்புச் செலவில்லாமல் விளைவிக்கப்படுவதால், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே நேரத்தில், தற்போது கேரளத்திலும் மரவள்ளிக் கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதால், அவர்கள் இங்கு வந்து மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண்டனர்.

  மேலும், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாவு, ஜவ்வரிசி ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கின் பால் அளவை வைத்தே வாங்கப்படுகிறது.

    இதனால், மரவள்ளிக் கிழங்கின் விலை மிகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ 5 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது என்பதால், விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai