Enable Javscript for better performance
மோட்டார் வாகன புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் வாகன புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By போடி  |   Published on : 29th April 2015 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடியில், மோட்டார் வாகன புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

       பேருந்துகளுக்கு நடத்துநர் தேவையில்லை, ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை தனியாரிடம் ஒப்படைப்பது, வழித்தடங்களை ஏல முறையில் ஒதுக்குவது, அதன்மூலம் பேருந்து கட்டணங்களை நிர்ணயிப்பது, ஓட்டுநர் உரிமம், வாகன தகுதிச் சான்று, வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை கவனிக்க தனியாக கார்ப்பரேட் நிறுவனம் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புதிய போக்குவரத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.

      இதைக் கண்டித்து, ஏப்ரல் 30 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் சிலை திடலில் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நிர்வாகி பி. சந்திரசேகர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. ராஜப்பன், எஸ்.கே. பாண்டியன், நகரச் செயலர் எஸ். செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

      இதில், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai