சுடச்சுட

  

  ஏடிஎம் கார்டு மோசடி அதிகரிப்பு: திண்டுக்கல் எஸ்.பி. எச்சரிக்கை

  By திண்டுக்கல்  |   Published on : 30th April 2015 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏடிஎம் கார்டு ரகசிய எண்களை பெற்றும், முதலீடு செய்வதாகக் கூறி முன்பணம் பெறுவது போன்ற நூதான மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் தெரிவித்துள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 20 நாள்களில், இதுபோன்ற மோசடியில் பல லட்சங்களை இழந்துள்ளனர்.

   இந்த நிலையில், ரிசர்வ் வங்கி சார்பில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெயரில் ரூ.1 கோடி முதலீடு செய்யப்படும் என செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பணத்தை பெற, முன்பணமாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தொழில்நுட்ப பிரிவில் பட்டையம் பெற்றுள்ள அந்த இளைஞர், ரூ.1 கோடிக்கு ஆசைப்பட்டு இதுவரை ரூ.6 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். 

   இதனிடையே திடீரென அந்த வங்கிக்கணக்கு செயல் இழந்ததை அறிந்த அந்த இளைஞர், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:  கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற போலியான அறிவிப்புகளை நம்பி, முன்பின் தெரியாதவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வங்கிகள் தரப்பில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் குறுந்தகவல் அனுப்பப்படுகின்றன.

  அதேபோல், பல்வேறு இடங்களில் நடைபெறும் மோசடி குறித்த ஒலிப்பதிவுகள் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வருகின்றன. இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று, இதுபோன்ற மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai