சுடச்சுட

  

  ஒட்டன்சத்திரம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

  By ஒட்டன்சத்திரம்  |   Published on : 30th April 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் 63-ஆவது       பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நடைபெற்ற விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தலைமை வகித்தார். தொகுதி ஒன்றியச் செயலாளர்கள் இரா.சோதீசுவரன்,டி.தர்மராஜன், க.தங்கராஜ், நா.சுப்பிரமணியன், தி.கருப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ப.வெள்ளைச்சாமி வரவேற்றார்.

  விழாவில், 2520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகியோர் வழங்கினர். ரத்ததானம் வழங்கிய 630 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இ.பெ.செந்தில்குமார், அவைத்தலைவர் தி.மோகன், துணைச் செயலாளர்கள் சி.ராஜாமணி,நபெ.ஜீவா,நஜெசி லூர்துமேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.ஹரிஹரசுதன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai