சுடச்சுட

    

    கண்ணகி கோயில் திருவிழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    By தேனி  |   Published on : 30th April 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் கண்ணகி கோயில் சித்திரைப் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மே 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து தேனி ஆட்சியர் ந.வெங்கடாசலம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:  சித்திரை பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும்   கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் திருவிழா நடைபெறும் நாளன்று உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

     அதன் அடிப்படையில் மே 4 ஆம் தேதி (திங்கள் கிழமை) தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் மற்றும் இதர முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 23 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகும். மேலும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai