சுடச்சுட

    

    சின்னமனூரில் கால்வாய் பணியால் தேரோட்டத்திற்கு சிக்கல்

    By உத்தமபாளையம்  |   Published on : 30th April 2015 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னமனூரில் சாக்கடையை அகலப்படுத்துவதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளதால் தேரோட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

       சின்னமனூரில் பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 2 நாள்கள் தேரோட்டம் நடைபெறும்.

      தேரடியில் இருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகளை வழியாக கண்ணாடிக்கு முக்கு சந்திப்பு சென்று நிலைக்கு செல்லும். இந்நிலையில் தேர் கடந்து செல்லும் பகுதியான கண்ணாடி முக்கு சந்திப்பில் சாக்கடைக் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. இதனால் மே 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து நகராட்சி பொறியாளர் கூறியது: தேரோட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேரோட்டம் முடிந்த பிறகு மீதமுள்ள பணிகள் தொடரும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai