சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அருகே 17 வயது சிறுமிக்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

  ஆண்டிபட்டி அருகே நல்லமுடிபட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது 17 வயதுடைய மகளுக்கும், உறவினர் பையனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இச்சம்பவம் குறித்து சைல்டு லைன் 1098 என்ற எண்ணிற்கு சிலர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சைல்டு லைன் அலுவலர் ராஜா உள்ளிட்டோர் புதன்கிழமை தங்கவேல் வீட்டுக்குச் சென்று இரு வீட்டாரையும் அழைத்துப் பேசினர். அப்போது, சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் திருமணம் நடத்த வேண்டும் என இருவீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai