சுடச்சுட

  

  தேனி உள்ளிட்ட 3 இடங்களில் மகளிர்குழு விற்பனை அங்காடிகள்

  By தேனி  |   Published on : 30th April 2015 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி உள்ளிட்ட 3 இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அங்காடிகள் அமைக்கப்பட உள்ளதாக, மகளிர் திட்ட அலுவலர் உஷாதேவி புதன்கிழமை தெரிவித்தார்.

   இது குறித்து அவர் கூறியதாவது: ஊரக வாழ்வாதார இயக்கத்திட்டத்தின் கீழ்,  மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்வதற்கு தேனி, பெரியகுளம், கம்பம் ஆகிய இடங்களில் மதி கியாஸ்க் என்ற பெயரில் விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. அங்காடி கட்டுமான பணிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் இந்த அங்காடிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

  பெரியகுளத்தில், மாரியம்மன் கோயில் தெருவில் மதி கியாஸ்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேனி, கம்பம் ஆகிய இடங்களில் நகராட்சி நிர்வாகம் மூலம் இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளில் ஒரே தொழில் செய்யும் மகளிர் குழுக்களுக்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ள அரசு ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தையல், ஆடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, மல்லிகைப் பூ சாகுபடி, மெழுகுப்பொருள் தயாரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுக்களுக்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தர மானியம் வழங்க அரசுக்கு பரிந்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai