சுடச்சுட

  

  பள்ளிக்குச் செல்லாத 87 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

  By உத்தமபாளையம்  |   Published on : 30th April 2015 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், சின்னமனூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்கு செல்லாது இடைநின்ற 87 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதி பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

  மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவின்பேரில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியங்களில் இடைநிலைக் கல்வி வரை செல்லாத மாணவர்களை கணக்கிடும் பணி, கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.   இதன்படி, சின்னமனூர் வட்டார வளமையத்தின் மேற்பார்வையாளர் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது. அதில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  மேலும், மாணவர்களுக்கு தேவையான பள்ளிச் சீருடை, பாடப் புத்தகம், நோட்டுகள் என அனைத்தும் பள்ளியிலே இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.  தொடர்ந்து, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 24 பேர் உள்பட 87 பேரை அந்தந்தப் பகுதி பள்ளிகளிலேயே மீண்டும் சேர்க்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai