சுடச்சுட

  

  முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுகள் விபரத்தை மின் ஆளுமை மூலம் பதிவு செய்வதற்கு, முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

   இது குறித்து மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுகள் விபரத்தை மின் ஆளுமை மூலம் பதிவு செய்ய மே 6 ஆம் தேதி உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 13 ஆம் தேதி போடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 20 ஆம் தேதி பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 27 ஆம் தேதி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பதிவு முகாம் நடைபெறுகிறது. தேனி வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் மே 30 ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

   முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுகள் தங்களது ஆதார் அடையாள அட்டை, அடையாள அட்டை, படை விலகல் சான்று, வங்கிக்கணக்கு எண், ஓய்வூதியர் எண் ஆகியவற்றை சமர்ப்பித்து மின் ஆளுமை மூலம் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai