சுடச்சுட

  

  வனத் துறையினரிடம் தகராறு: 5 பேர் மீது வழக்குப் பதிவு

  By ஆண்டிபட்டி  |   Published on : 30th April 2015 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடமலைக்குண்டு அருகே மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில், வனக்காவலரிடம் தகராறில் ஈடுபட்டு மறியல் செய்ததாக, 5 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசரடி பகுதியைச் சேர்ந்த ரவி, முருகன், குமரேசன், ஜெயராஜன் மற்றும் ராஜா ஆகியோர், தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அப்பகுதியில் நடைபெறும் விழாவுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

    மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில் இப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, வனத் துறையினருக்கு இவர்கள்  மிரட்டல் விடுத்தனராம். மேலும், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, பின்னர் கலைந்து சென்றனராம்.

    இது குறித்து, வனக் காவலர் ஆறுமுகம் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai