சுடச்சுட

    

    கூட்டுறவுச் சங்கங்களில் சுயதொழில் கடன் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

    By தேனி  |   Published on : 18th December 2015 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற கூட்டுறவுச் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தமிழ்நாடு பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் சிறுகடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம்.

    கடன் பெற விரும்புவோர் 18 முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கும், நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.

    இதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai