Enable Javscript for better performance
கொடுவிலார்பட்டியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கொடுவிலார்பட்டியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை மையம் தொடக்கம்

    By தேனி  |   Published on : 18th December 2015 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே கொடுவிலார்பட்டி மைத்ரி சொசைட்டியில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட சமூக நலத் துறை மூலம் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

     இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: குடும்ப வன்முறை தொடர்பான புகார் அளிப்போர் மற்றும் எதிர் மனுதாரர் பிரச்னையின்றி சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கவும், ஆதரவற்ற பெண்களை காப்பகத்தில் தங்க வைக்கவும், உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கவும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறை மற்றும் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரும் பெண்களுக்கு சட்ட உதவிகள் செய்யவும் மாவட்ட சமூக நலத் துறை மூலம் கொடுவிலார்பட்டியில் செயல்பட்டு வரும் மைத்ரி சொசைட்டியில் சமூக சேவை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

     குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது பிரச்னை குறித்து மைத்ரி சொசைட்டி தொண்டு நிறுவனம், செல்லிடப் பேசி எண்: 94422 51106, 94422 51108 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai