சுடச்சுட

    

    பெரியகுளம் ஜெ.ஏ. மகளிர் (தன்னாட்சி) கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.

     கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் தி.நிர்மலா தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் பி.ஹெலன் சந்திரா முன்னிலை வகித்தார். கருத்தரங்கு அமைப்பாளர்என்.எம்.பிரான்ஸிஸ் மேரி வரவேற்றார். நிலையான வளர்ச்சிக்கு புதுமையான சந்தை உத்திகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை முனைவர் கசிமீர்ராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் முனைவர் வி.மாரியப்பன் (பாண்டிச்சேரி), அந்தோணி விஷால் பிரான்ஸிஸ் (சென்னை) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இக்கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் பி.ஜே.குயின்ஸ் ஜெயந்தி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai