சுடச்சுட

  

  சண்முகாநதி கால்வாயில் நீர்வரத்து தொடக்கம்

  By உத்தமபாளையம்  |   Published on : 19th December 2015 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம்,சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 18 நாள்களுக்கு பிறகு எரசக்கநாயக்கனூர் கண்மாயை அடைந்தது. உத்தமபாளையம் அடுத்துள்ள சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிச்சேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கருக்கும் மேலாக விவசாயம் நடைபெறுகிறது.

     இங்குள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டதை உயர்த்தும் வகையில், நவம்பர் 30 ஆம் தேதி சண்முகா நதி அணையில் இருந்து 14.7 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

  ஆனால், கால்வாயில் பராமரிப்பு இல்லாததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் எரசக்கநாயக்கனூர், அதனை சுற்றியுள்ள  கண்மாய்களுக்கு போதுமான தண்ணீர் சென்றடையல்லை.

  பின்னர் பொதுப்பணித்துறையினர் சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர் பகுதி  கால்வாய்களை புதன்கிழமை தூர்வாரினர். இதனால் கண்மாயை தண்ணீர் சென்றடைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai