Enable Javscript for better performance
நீதிமன்ற கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போடியில் நீதிமன்ற கட்டடம் கட்டப்படும் இடத்தை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

     போடியில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சுமார் 30 ஆயிரம் சதுரடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பில் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 13.12.2015ஆம் தேதி நடைபெற்றது.

     இந்நிலையில் நீதிமன்ற கட்டடம் கட்டப்படும் இடத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

     பின்னர் கட்டுமானம் குறித்தும், தரமான பொருள்களைப் பயன்படுத்தி விரைவாக கட்டுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், போடி நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார், நகர்மன்ற தலைவர் பழனிராஜ், நகராட்சி பொறியாளர் திருமலைவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai