சுடச்சுட

    

    கல்லூரியில் தொலைதூரக் கல்வி சேர்க்கை சிறப்பு முகாம்

    By உத்தமபாளையம்  |   Published on : 20th December 2015 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், ஜனவரி 2016ஆம் ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி நேரடிச் சேர்க்கைக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

     இக் கல்லூரியில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி  மையம் செயல்பட்டு வருகிறது. இதில், முதுகலை, இளங்கலை பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் என பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை  டிசம்பர் 31 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம், டிசம்பர் 22ஆம் தேதி இக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல அதிகாரிகள் கலந்துகொண்டு முகாமை நடத்துகின்றனர். எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai