சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரவு டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.

    குமுளியிலிருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியகுளம்-திண்டுக்கல் சாலையில் இ.புதுப்பட்டி அருகே பேருந்து டிராக்டரை முந்திச் செல்லமுயன்ற போது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த ஜங்கால்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்லப்பாண்டி, புல்லக்காபட்டியைச் சேர்ந்த பொன்னழகர் மகன் செந்தில்குமார், ஆண்டி மகன் அழகர் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்து, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து, பெரியகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai