Enable Javscript for better performance
போடி அருகே பூக்குழி திருவிழா: 1,800 பக்தர்கள் தீ மிதித்தனர்- Dinamani

சுடச்சுட

    

    போடி அருகே பூக்குழி திருவிழா: 1,800 பக்தர்கள் தீ மிதித்தனர்

    By போடி,  |   Published on : 21st December 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி அருகே நாகலாபுரத்தில் 24ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை 1,800 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இக்கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் சார்பில் இந்த பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, சனிக்கிழமை காலையில் ஐயப்பன் ஆசிரமம் திறக்கப்பட்டது. பின்னர், பாலசாஸ்தா இன்னிசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சக்தி கரகம் எடுத்தல் மற்றும் சுவாமி ஐயப்பன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, மேளம் தாளம், வாணவேடிக்கை முழங்க ஐயப்பன் நகர்வலம் வந்தார்.

    சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை ஐயப்பன் பஜனை நடைபெற்றது. இதில், நாகலாபுரம், சில்லமரத்துப்பட்டி, சங்கராபுரம், சிலமலை, அணைக்கரைப்பட்டி, போடி, ராசிங்காபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பாகப் பாடிய அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றது. அதையடுத்து, 21 அடி நீளம் 3 அடி அகலத்தில் குழி உருவாக்கப்பட்டது. இதில், சுமார் இரண்டரை டன் எடையுள்ள விறகுகள் மூலம் தீ வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, யாகபூஜை நடைபெற்றது. பூக்குழியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர், ஐயப்பனுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போடி டி.எஸ்.பி. ஸ்ரீநிவாசப்பெருமாள் தலைமையில், புறநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் இத்ரிஸ்கான் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai