சுடச்சுட

  

  வரதட்சணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

  By தேனி  |   Published on : 21st December 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியகுளம் அருகே வரதட்சணைக் கேட்டு மனைவியை மிரட்டியதாக, நீதிமன்ற உத்தரவின்பேரில், கணவர் உள்பட 3 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை தேனி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

  முருகமலைப் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் செல்வேந்திரன். இவரது மனைவி விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுதா. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

  இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த நவம்பர் 9ஆம் தேதி சுதா தனது பெரியம்மாள் ஆண்டாள், உறவினர் சுந்தரவள்ளி ஆகியோருடன் முருகமலைக்குச் சென்றுள்ளார். அப்போது, வரதட்சணையாக ரூ. 13 லட்சம் கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழமுடியும் என்று செல்வேந்திரன், அவரது தந்தை ரெங்கசாமி, தாயார் காஞ்சனா ஆகியோர் சுதாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சுதா புகார் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், புகாரின் அடிப்படையில் செல்வேந்திரன், ரெங்கசாமி, காஞ்சனா ஆகியோர் மீது, தேனி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai