சுடச்சுட

  

  தேனி மாவட்டம் சின்னமனூரில் 2 வீடுகளில் பணம், நகையைத் திருடிய நபரை போலீஸார் திங்கள்கிழமைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம், நகை மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

   சின்னமனூர் கருங்கட்டான்குளம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (46). இவரது வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் நகை திருடிச்சென்றனர். இதே போல், குப்பமுத்தி என்பவர் வீட்டில் ரூ.5000 மற்றும் 2 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டிருந்தது.  இச்சம்பவங்கள் குறித்து சின்னமனூர் காவல்நிலைய ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (43) என்பவர் மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து முருகனைப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம், 4 கிராம் மோதிரம் மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai