சுடச்சுட

  

  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு: சின்னமனூரில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

  By DN  |   Published on : 23rd December 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், சின்னமனூரில் செவ்வாய்க்கிழமைஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற நகராட்சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  சின்னமனூர் நகராட்சி 24ஆவது வார்டிலுள்ள விஷ்வன்குளம் 1 ஏக்கர் 82 சென்டில் இருந்தது.

  இக்குளத்தை ஆக்கிரமிப்பு செய்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் நகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்ற முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள்  அதிகாரிகள் மற்றும் ஜெ.சி.பி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் நகராட்சி ஆணையர் சுப்பையா,காவல் ஆய்வாளர் அசோகன் உள்ளிட்டோர்  ஜனவரி 5ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு காலஅவகாசம் கொடுத்தனர். அதற்கு பின்   எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai