சுடச்சுட

    

    விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

    By தேனி  |   Published on : 23rd December 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் பாராட்டு தெரிவித்தார்.

     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

     தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் 3 ஆம் இடம் வென்ற தமிழக அணியின் விளையாட்டு வீரர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், தென் மாவட்ட அளவில் நடைபெற்ற, நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற, அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபூபதி ஆகியேருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    குறைதீர் கூட்டத்தில், வேளாண் துறை சார்பில் பருத்தி சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ரோடவேடர் களையெடுப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேனி வட்டாரத்தைச் சேர்ந்த 48 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடசுப்பிரணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai