சுடச்சுட

    

    உலர் களமாகும் சாலைகளால் விபத்து ஏற்படுவதாகப் புகார்

    By ஆண்டிபட்டி  |   Published on : 24th December 2015 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி பகுதியில் விவசாயப் பொருள்களை சாலைகளில் உலர்த்துவதால், விபத்துகள் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

    ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வந்ததால் மானாவாரிப் பயிர்களில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட பயிர்களை உலர்த்துவதற்கு இடம் இல்லாததால், இப்பகுதி மக்கள் சாலைகளில் உலர்த்தி வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ள பொருள்களின் மீது செல்லும் போது கவிழ்ந்து விபத்துகளில் சிக்க வேண்டியுள்ளது.

    எனவே விவசாயப் பொருள்களை சாலையில் உலர்த்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கிராமங்களில் விவசாய பொருள்களை உலர்த்துவதற்கு களம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai