சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் சேதமடைந்த குடிநீர் திட்டக் குழாய்களை சீரமைக்க ரூ.52 லட்சம் மதிப்பீடு

  By தேனி  |   Published on : 24th December 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றில் சேதமடைந்த குடிநீர்த் திட்டக் குழாய்கள், மோட்டார்களை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  இம்மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளது.

  இதனால் குடிநீர்த் திட்ட உறைகிணறுகள் மற்றும் மோட்டார் பம்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குடிநீர்க் குழாய்களும் பல்வேறு இடங்களில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

  இவற்றில் அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், குமணன்தொழு, கடமலைக்குண்டு, கோவிந்தநகரம், சுருளிப்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, மார்கையன்கோட்டை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.52 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai