சுடச்சுட

  

  ஒட்டன்சத்திரம் அருகே இரு கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் சாவு

  By ஒட்டன்சத்திரம்  |   Published on : 25th December 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்தகாயம் அடைத்தனர்.

   நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி(42).

  இவர், ஆங்கில பேச்சு மையம் வைத்து நடத்தி வந்தார். இவர், திருப்பூரில் உள்ள நண்பர் டேவிட் வீட்டுக்கு, கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது மனைவி லிட்டில்ராஜம் (35), குழந்தைகள் அஞ்சலி (3), அஞ்சனா (2) ஆகியோருடன் காரில் சென்றார்.

    சிவகாசியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (68). இவர் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பனியன் தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி ருக்மணி (57), மகன் மணிகண்டன் (45), மருமகள் ராதா (40), பேத்தி மகாலட்சுமி (13),பேரன் சபரீஷ் (3) ஆகியோருடன் காரில் சிவகாசியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார்.

    இந்த இரு கார்களும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் அம்பிளிக்கையை அடுத்துள்ள வீரமுத்து தோட்டத்து சாலைப் பிரிவு அருகே வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில், சிவகாசி சென்ற சுப்பிரமணி, ருக்மணி, மணிகண்டன், ராதா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் சென்ற  சிவசுப்பிரமணி, லிட்டில்ராஜம், அஞ்சலி, அஞ்சனா ஆகியோர் பலத்தகாயம் அடைத்தனர்.

  இதில், சிவசுப்பிரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த காயம் அடைத்த லிட்டில்ராஜம், மணிகண்டனின் மகள் மகாலட்சுமி, மகன் சபரீஷ் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து அம்பிளிக்கை காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் குமரேசன், மண்டல துணை வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலங்களைப் பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.    

   விபத்தில் சிவசுப்பிரமணியனின் இரு குழந்தைகளான அஞ்சலி, அஞ்சனா ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அந்த குழந்தைகளை உறவினர்கள் வரும் வரை மகளிர் போலீஸார் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்று ஆறுதல் கூறி உணவு மற்றும் தேவையான பொருள்களை வாங்கி கொடுத்தனர். அதன் பிறகு திருப்பூரில் இருந்து வந்த உறவினர் டேவிட் வசம் குழந்தைகளை போலீஸார் ஒப்படைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai