சுடச்சுட

  

  மூதாட்டியிடம் நகை பறிப்பு: கேரள இளைஞர்கள் 3 பேர் கைது

  By போடி  |   Published on : 25th December 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம் போடியில் மூதாட்டியிடம் வியாழக்கிழமை நகை பறித்துச் சென்ற கேரள இளைஞர்கள் 3 பேரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

   போடி புன்னைவனம் பிள்ளைத் தெருவை சேர்ந்த விசுவநாதன் மனைவி சீதாலட்சுமி (65). இவர், போடி திருவள்ளுவர் சிலை அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். வியாழக்கிழமை காலை இவரது கடைக்கு சிகரெட் வாங்க வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல் பாவனை செய்து மூதாட்டியின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார்.

   அப்போது மூதாட்டி அந்த இளைஞருடன் போராடினார். இதையடுத்து, கையில் சிக்கிய 2 பவுன் நகையுடன் அந்த இளைஞர், தயாராக இருந்த ஒரு காரில் ஏறிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கேரள பதிவு எண் கொண்ட அந்தக் காரில் மேலும் இரண்டு இளைஞர்கள் இருப்பது தெரிந்தது.

   இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போடி டி.எஸ்.பி.க்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போடி டி.எஸ்.பி. ஸ்ரீநிவாசப்பெருமாள் உள்ளிட்ட போலீஸார் கேரளாவை நோக்கிச் சென்ற காரை விரட்டிச் சென்றனர். போடிமெட்டு சோதனை சாவடியில் அந்த கார் பிடிபட்டது.

   விசாரணையில், காரில் வந்த இளைஞர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜேஷ் (23), ரமேஷ் நாராயணன் மகன் ரெதீஸ்குமார் (21), பாபு மகன் அருண் (20) என்பது தெரிந்தது.

   ராஜேஷூக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் உசிலம்பட்டியில் உள்ள நண்பர் ஒருவரைப் பார்த்து பணம் வாங்க வந்த இளைஞர்கள் 3 பேரும் நண்பர் இல்லாததால் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். வழியில் போடிக்கு வியாழக்கிழமை காலை வந்த போது, மூதாட்டியின் நகையை பறித்தது தெரியவந்தது.

   இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 3 பேரையும் கைது செய்த போடி டவுன் போலீஸார், அவர்களிடம் இருந்த நகையையும் மீட்டனர். மேலும் இவர்கள் மீது வேறு வழக்குகள் தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai