சுடச்சுட

    

    வருசநாட்டில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

     தேனி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் நடைபெற்ற இம்முகாமை, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்கத்தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார். இதில், ரத்த பரிசோதனை, கண், காது ஆகிய குறைபாடுகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

     மேல்சிகிச்சை தேவைப்பட்டோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்துகொண்டனர்.

     இந்நிகழ்ச்சியில், கடமலை-மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் முருக்கோடை ராமர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் மருத்துவர் கதிர்காமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai