சுடச்சுட

    

    தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் போலி பீடிகள் மொத்த விற்பனையில் ஈடுபட்ட வந்த மூவரை ஓடைப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

      தேனி மாவட்டத்திலுள்ள  உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்பட பல்வேறு பகுதிகளில்  பிரபல  பீடி நிறுவனத்தின் பெயரில் மர்ம கும்பல் சிலர் போலியான லேபிள் தயாரித்து விற்பனை செய்வதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் கண்டுபிடித்து புகார் கொடுத்தனர்.   அதன்பேரில்,உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் ரகசிய கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ஓடைப்பட்டி பகுதியில் போலி பீடிகள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் நல்ல முத்து பேருந்து நிலையத்தில் விற்பனை செய்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் 198 பண்டல்களில் போலி பீடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.    இது தொடர்பாக, கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த கொட்டாயைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), உமர்(56) மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த  நாலாயிரமுத்து(54) ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai