சுடச்சுட

  

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகார் பெட்டி வழங்கல்

  By போடி  |   Published on : 27th December 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போடி அருகே அரசுப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான புகார் பெட்டி தொடக்க விழா தேனி மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

  போடி சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேனி சைல்டு லைன்-1098 அமைப்பின் சார்பில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  உதவித் தலைமையாசிரியர் கவிதா தலைமை வகித்தார்.

  சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு வரவேற்றார். சைல்டு லைன் மற்றும் ஏ.எச்.எம். டிரஸ்ட் இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகள் பிரச்னை, குழந்தைகள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

  உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் வனஜா கிரேனப் செல்வகுமாரி புகார் பெட்டியை  பயன்பாட்டுக்கு வழங்கினார்.

   பள்ளி மாணவ, மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிப்பதற்கு புகார் பெட்டியை பயன்படுத்திக் கொள்வதுடன், 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார். ஆசிரியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai