சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் நெசவுத் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சக்திவேல் (47). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மாயமானாராம்.

    இந்நிலையில் சனிக்கிழமை காலை  ஆண்டிபட்டி தொலைபேசி நிலையம் எதிரே உள்ள பாலத்தின் அருகே சக்திவேல் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai