சுடச்சுட

    

    உத்தமபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியில் கார்த்திகேயன் என்பவரின் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்ற கண்ணன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது மகன் தேடிச் சென்றுள்ளார். அப்போது கண்ணன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

    இதையடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai