சுடச்சுட

    

    தேனி மாவட்டம் கூடலூர் பொம்மச்சன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராமராஜ் சில வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் இரண்டாவது மகள் மணிமேகலை (17) திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கூடலூருக்கு வந்துள்ளார். அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், மணிமேகலை மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

     இந்நிலையில், செவ்வாய்கிழமை வீட்டில் இருந்த மணிமேகலை, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai