சுடச்சுட

  

  கம்பம் அருகே கால்வாயில் மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

  By கம்பம்  |   Published on : 31st December 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கம்பம் அருகே புதன்கிழமை கால்வாயில் குளிக்கச் சென்று மாயமான பொறியியல் கல்லூரி மாணவரை தீயணைப்பு வீரர்கள்,போலீஸார் தேடி வருகின்றனர்.

  கம்பம் நகராட்சி அருகே  சுக்காகல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் ரேவந்த் (19). இவர், கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக கம்பம் வந்திருந்த ரேவந்த் தனது நண்பர்கள் 4 பேருடன் புதன்கிழமை கழுதைமேட்டுபுலம் அருகே 18ஆம் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தாராம்.  அப்போது ரேவந்த் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், நண்பர்கள் காப்பற்ற முயற்சித்தும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai