சுடச்சுட

  

  தேனி ஆட்சியரிடம் ரூ.15 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கல்

  By தேனி  |   Published on : 31st December 2015 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

  தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் எஸ்.ஏ.சங்கரகுமார், பொதுச்செயலர் டி.ராஜமோகன், பொருளாளர் என்.ஜவஹர் ஆகியோர் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை ஆட்சியரிடம் வழங்கினர்.

  உறவின்முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, கண்ணாயிரம், உறவின்முறை மெட்ரிக் பள்ளி செயலர் ஆர்.பாஸ்கரன், ஸ்ரீபத்திரகாளியம்மன் பால் பண்ணை செயலர் நாராயணசாமி, தேவஸ்தான செயலர் என்.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai