சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு 33 தொழில் பிரிவுகளில் பயிற்சி

  By தேனி  |   Published on : 31st December 2015 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு 33 வகையான தொழில்பிரிவுகளில் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: முன்னாள் படை வீரர் மற்றும் குடும்பத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல், கணினி, ஆபரணங்கள் தயாரிப்பு, உணவு பொருள் தயாரிப்பு, மீன் வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட 33 தொழில் பிரிவுகளில் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

  பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத் தரப்படும்.

  பயிற்சியில் சேர விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். 

  முன்னதாக அரசு சார்பில் முன்னாள் படை வீரர் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு திருமண நிதி உதவி, கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை மற்றும் தொழில் கடன் மானிய உதவியாக மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்தை ஆட்சியர் வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மனோகரன், நல அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai